search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாலியல் வழக்கு"

    2016-ம் ஆண்டு தேர்தலின் போது டிரம்பின் பிரசாரக் குழுவில் பணியாற்றிய ஆல்வா ஜான்சன் என்ற பெண், பிரசாரத்தின் போது டிரம்ப் தன்னிடம் பாலியல் ரீதியில் அத்துமீறியதாக குற்றம் சாட்டி உள்ளார். #DonaldTrump
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் கடந்த 2016-ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்டு டிரம்ப் மீது ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் உள்பட பல பெண்கள் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தினர்.

    பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த குற்றச்சாட்டுகளால் டிரம்புக்கு பெண்களின் ஆதரவு வெகுவாக குறைந்தது. எனினும் அவர் வெற்றி பெற்று ஜனாதிபதி ஆனார். அதன் பின்னரும் சில முறை டிரம்ப் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

    இந்த நிலையில் 2016-ம் ஆண்டு தேர்தலின் போது டிரம்பின் பிரசாரக் குழுவில் பணியாற்றிய ஆல்வா ஜான்சன் என்ற பெண், பிரசாரத்தின் போது டிரம்ப் தன்னிடம் பாலியல் ரீதியில் அத்துமீறியதாக குற்றம் சாட்டி உள்ளார். இதுதொடர்பாக அவர் டிரம்ப் மீது புளோரிடா மாகாணத்தில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    அவர் தன்னுடைய மனுவில், “2016-ம் ஆண்டு புளோரிடா மாகாணத்தில் உள்ள டம்பா என்ற இடத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்துக்கு வந்த டிரம்ப், என்னை வலுக்கட்டாயமாக முத்தமிட்டார். பெண்களுக்கு எதிரான டிரம்பின் அத்துமீறல் நடவடிக்கையில் நானும் பாதிக்கப்பட்டேன்” என தெரிவித்துள்ளார்.
    மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய நிர்மலாதேவியின் மனுவை ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. #Nirmaladevi #Nirmaladeviaudiocase
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டார். இவருக்கு உடந்தையாக இருந்த பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைதானார்கள்.

    சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கை விசாரித்து ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.

    இந்த நிலையில் எங்கள் மீது அரசு தரப்பு குற்றம் சாட்டுவதில் எந்த முகாந்திரமும் இல்லை. எனவே வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என நிர்மலாதேவி ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் மனு தாககல் செய்தார். இதே கோரிக்கையை வலியுறுத்தி முருகன், கருப்பசாமியும் மனு செய்தனர்.

    இந்த வழக்கு இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது நிர்மலாதேவியை வழக்கில் இருந்து விடுவிக்க அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாக தெரிகிறது.

    இதையடுத்து வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய நிர்மலாதேவியின் மனுவை மாஜிஸ்திரேட்டு தள்ளுபடி செய்தார். முருகன், கருப்பசாமியின் மனுவும் நிராகரிக்கப்பட்டது. தொடர்ந்து வழக்கின் மூல விசாரணையை நீதிபதி வருகிற 7-ந்தேதிக்கு ஒத்திவைத்தார். #Nirmaladevi #Nirmaladeviaudiocase
    பாலியல் புகாருக்கு ஆளான மத்திய இணை மந்திரி எம்ஜே அக்பர் மீது மேலும் ஒரு பெண் பாலியல் புகார் தெரிவித்துள்ளார். #MeToo #MJAkbar #PriyaRamani
    புதுடெல்லி:

    மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரியாக இருப்பவர் எம்.ஜே.அக்பர்.

    இவர் பல்வேறு பத்திரிகைகளில் ஆசிரியராக பணி புரிந்துள்ளார்.

    எம்.ஜே.அக்பர் மீது பெண் பத்திரிகையாளர் பிரியா ரமணி பாலியல் குற்றச்சாட்டு கூறினார். “மீடூ” இயக்கத்தின் மூலம் அவர் எம்.ஜே.அக்பர் குறித்து பரபரப்பான பல தகவல்களை வெளியிட்டார். அவரைத் தொடர்ந்து மேலும் 2 பெண் பத்திரிகையாளர்கள் அக்பர் மீது பாலியல் புகார்கள் கூறினார்கள்.

    இதனால் மத்திய மந்திரி பதவியில் இருந்து அக்பர் விலக வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியது. எனவே அக்பரை பதவியில் இருந்து விலக்குவார்கள் என்று கூறப்பட்டது. ஆனால் அவர் மீது இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இதற்கிடையே நைஜீரியாவில் இருந்து டெல்லி திரும்பிய எம்.ஜே.அக்பர், தன் மீது மீடூ இயக்கத்தின் மூலம் பாலியல் புகார் கூறி பெண் பத்திரிகையாளர் பிரியாரமணி மீது சட்டப் பூர்வ நடவடிக்கை எடுக்கப்போவதாக கூறினார். அதன் படி பிரியாரமணி மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள சுமார் 20 பெண் பத்திரிகையாளர்கள் பிரியாரமணிக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர். அக்பர் தொடுத்துள்ள வழக்கை எதிர்கொள்ள தயார் என்று பிரியாரமணியும் 20 பெண் பத்திரிகையாளர்களும் கூறியுள்ளனர்.



    இந்த நிலையில் மத்திய மந்திரி எம்.ஜே.அக்பர் மீது மேலும் ஒரு பெண் பரபரப்பு பாலியல் புகாரை தெரிவித்துள்ளார். அவரது பெயர் துஷிதா படேல். இவர் நேற்று வெளியிட்ட ஒரு பதிவில் கூறி இருப்பதாவது:-

    மத்திய மந்திரி எம்.ஜே.அக்பர் இரண்டு தடவை என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார். பத்திரிகை பணி தொடர்பாக என்னை அவர் ஒரு நட்சத்திர ஓட்டலுக்கு வருமாறு அழைத்தார். நான் அங்கு சென்று அவரை சந்தித்தேன்.

    அவரது அறைக்குள் சென்ற பிறகுதான் அவர் தவறான கண்ணோட்டத்துடன் என்னைப் பார்த்ததை புரிந்து கொண்டேன். அவர் என்னை கட்டாயப்படுத்தி கட்டிப்பிடித்து முத்தமிட முயன்றார்.

    அவரது உண்மையான முகம் இப்போதுதான் வெளியில் தெரிய தொடங்கியுள்ளது. எனவேதான் நானும் எனக்கு நேர்ந்த பாலியல் தொல்லையை வெளியிட்டுள்ளேன்.

    இவ்வாறு பெண் பத்திரிகையாளர் துஷிதா படேல் கூறியுள்ளார். அக்பர் மீது பெண்கள் அடுத்தடுத்து பாலியல் புகார்கள் கூறி வருவது மத்திய பா.ஜ.க. அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.

    இதற்கிடையே அக்பர் மீதான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுக்களை தீவிரப்படுத்த பெண் பத்திரிகையாளர்கள் முடிவு செய்துள்ளனர். பெண் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் மத்திய மந்திரிகள் ராஜ்நாத்சிங், மேனகாகாந்திக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. #MeToo #MJAkbar #PriyaRamani
    பெண் பக்தர்களை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் நித்தியானந்தாவை கைது செய்ய கோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து ஆசிரமத்தில் இருந்து அவர் தலைமறைவாகி விட்டார். #nithyananda
    பெங்களூர்:

    கர்நாடக மாநிலம் பெங்களூர் அருகில் உள்ள பிடதியில் நித்யானந்தா ஆசிரமம் நடத்தி வருகிறார்.

    இந்த ஆசிரமத்தில் பெண் பக்தர்களை நித்யானந்தா பாலியல் பலாத்காரம் செய்கிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று நித்யானந்தா வின் சீடர் லெனின் 2010-ம் ஆண்டு போலீசில் புகார் செய்தார்.

    இந்த புகார் குறித்து பிடதி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ராம்நகர் மாவட்ட 3-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு 8 ஆண்டுகளாக நடந்து வருகிறது.

    கடந்த 6-ந்தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நித்யானந்தா கோர்ட்டில் ஆஜராகவில்லை. வழக்கு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் நித்யானந்தா அலட்சியம் காட்டி வருகிறார் என்று குறிப்பிட்ட நீதிபதி உடனே நித்யானந்தாவை கைது செய்ய உத்தரவிட்டார்.

    ஜாமீனில் அவர் வெளிவர முடியாத பிடிவாரண்டையும் பிறப்பித்தார். இதையடுத்து நித்யானந்தாதாவை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் இறங்கினார்கள்.



    அவரை தேடி ஆசிரமம் சென்றனர். அங்கு போலீசார் தீவிர சோதனை செய்தார்கள். ஆனால் நித்யானந்தா அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து, கர்நாடகாவில் அவருக்கு இருக்கும் மற்ற ஆசிரமங்களிலும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.

    வருகிற 14-ந்தேதி நித்யானந்தா மீதான வழக்கு ராம்நகர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. அன்றைய தினம் நித்யானந்தா கோர்ட்டில் ஆஜராவார் என்று பிடதி ஆசிரம வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.#nithyananda
    ×